அளுத்கம இழப்பீடு வழங்குவதை நான் தடுக்கவில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Friday, 16 March 2018

அளுத்கம இழப்பீடு வழங்குவதை நான் தடுக்கவில்லை: ரணில்


உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பாக 2014 அளுத்கம வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்கி முடிக்கப் போவதாக தெரிவித்திருந்த போதிலும் தேர்தல் முடியும் வரை அத்திட்டம் பின்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க அவரது 'கைகளாலேயே' இதனை வழங்க வேண்டும் என விரும்புவதாகக் கூறி இழப்பீடு தொடர்ந்தும் இழுத்தடிக்கப் படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றைய தினம் நேரடியாக தெரிவிக்கப்பட்டதையடுத்து தான் அவ்வாறு யாருக்கும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லையெனவும் உடனடியாக இழப்பீட்டை வழங்கி முடிக்குமாறும் அந்த இடத்தில் தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் ரணில்.


எனினும், மீண்டும் இது இன்னொரு வாக்குறுதியாகவே காற்றில் போகுமா என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment