![](https://i.imgur.com/BQTpnL5.png?1)
முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திர பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை தான் செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாநாடை அண்மித்த கால கட்டத்தில் இலங்கையை உலுக்கியுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் யாருடைய நன்மைக்காக அரங்கேற்றப்பட்டது எனும் கேள்வியும் தவிர்ப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்கத் தவறிய அரசின் மீதான கோபத்தையும் சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் வெளிப்படுத்தி வரும் நிலையில் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அம்பாறை மற்றும் மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்க அரசே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment