கண்டி மாவட்டத்தில் திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று திங்கட்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
புனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் கண்டி மாவட்ட செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்நிழக்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். அத்துடன், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபீர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, வன்முறையால் சேதமாக்கப்பட்ட இதுவரை பதிவு செய்யப்பட்ட குண்டசாலை, அக்குரனை, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ, கங்கஉட கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 66 வீடுகள் மற்றும் 65 வியாபார நிலையங்களுக்கான முதற்கட்ட நட்டஈடாக மொத்தம் 86 இலட்சத்து 79ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.
-R.Hassan
-R.Hassan
No comments:
Post a Comment