பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் 50க்கு மேற்பட்ட தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்ப்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், ரணில் பதவி விலக வேண்டும் என பல்வேறு மட்டத்தில் குரல் எழுப்பப் பட்டு வருகிறது. இவற்றுக்கு பதிலளித்துள்ள பிரதமர், தான் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்நோக்கத் தயாராக இருப்பதாகவும் அதற்கு முன் பதவி விலகப் போவதில்லையெனவும் பதிலளித்துள்ளார்.
வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியினரும் ரணிலுக்கு எதிராக வாக்களிப்பர் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment