மஹிந்த ராஜபக்சவை எதிர்ப்பதாகக் கூறி, பின் அவர் பக்கம் சாய்வதாகவும் தெரிவித்து ஈற்றில் குடும்ப வேலைகளைக் கவனித்து வரும் மேர்வின் சில்வா தனது புதல்வருக்கு ஈரானைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை நடாத்தி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய கட்சியொன்றை ஆரம்பித்தாவது தனது புதல்வரை அரசியலுக்குள் கொண்டு வர மேர்வின் தீவிர முயற்சியெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment