பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தமது கட்சி உறுப்பினர்களுக்கே பணப் 'பார்சல்' கொடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது தலைவருக்கு ஆதரவு தேடுவதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த விமல், தனக்கு எதிராக நான்காவது வரிசையில் பணம் கொடுத்தவரும் எடுத்தவரும் அமர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை ரணிலுக்கு ஆதரவாக நூற்றுக்கு அதிகமானோர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment