
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரபின் மரண அறிக்கையின் பிரகாரம் அவர் பிரயாணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாகவும் வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத்துக்கு முன்பாக பழுதுபார்க்கப்பட்டிருந்த குறித்த உலங்கு வானூர்தியில் கவனயீனமாக ஏதும் தவறுகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் மாறாக வேறு எந்த குழுவின் தாக்குதலோ திட்டமிட்ட நடவடிக்கையோ இல்லையென இவ்விவகாரத்தின் விசாரணையை நடாத்திய முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எல்.கே.ஜி வீரசேகர தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த அறிக்கை பெறப்பட்டுள்ள நிலையில் ஹெலிகப்டரில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment