கண்டி வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Monday, 26 March 2018

கண்டி வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: சம்பிக்க



கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட இனவன்முறைக்கும் தமக்கோ ஜாதிக ஹெல உறுமயவுக்கோ எந்தத் தொடர்புமில்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

பௌத்த பேரினவாத சிந்தனையைத் தூண்டுவதிலும் அதனை வன்முறை வடிவமாக மாற்றிய பொது பல சேனாவை உருவாக்குவதிலும் சம்பிக்க ரணவக்கவின் பங்கு குறித்து பல மட்டத்தில் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கண்டி வன்முறைக்குத் தொடர்பில்லையென சம்பிக்க மறுத்துள்ளார்.


பத்தரமுல்லயில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் பொலிசார் உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என தாம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment