கண்டி வன்முறைத் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயாத நிலையில் இந்தியா - ஜப்பான் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அங்கு இலங்கை முஸ்லிம்கள் பிரதிநிதிகள் குழுவொன்றை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் திலக் மாரப்பன, நிமல் சிறிபால டிசில்வா ஆகியோரும் கலந்து கொண்டுள்ள அதேவேளை இதற்கு முன் இடம்பெற்ற ஜனாதிபதியின் கூட்டத்தில் ஞானசாரவும் கலந்து கொண்டிருந்தார்.
அம்பாறையில் ஆரம்பித்து கண்டி மாவட்டத்தில் பல இடங்களுக்குப் பரவிய முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைகளை அடக்கத் தவறிய அரசு தற்போது 280 பேரைத் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment