70 வருட கால தடையை அகற்றி சவுதி வான் பரப்பூடாக இஸ்ரேலுக்கான விமானப் போக்குவரத்துக்கு அந்நாட்டு மன்னராட்சி அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த அனுமதி தமது நாட்டு விமானங்களுக்கும் தரப்பட வேண்டும் என தெரிவிக்கிறது இஸ்ரேல்.
நரேந்திர மோடியின் இந்திய அரசு மேற்கொண்ட ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பயனாக எயார் இந்தியா விமான சேவைக்கு சவுதி அரசு இவ்வனுமதியை வழங்கியுள்ளது. இதன் பின்னணியில் வாரம் மூன்று முறை டெல்லியிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவையை எயார் இந்தியா ஆரம்பித்துள்ளது.
சவுதி ஊடாகவே இப்பயணங்கள் இடம்பெறவுள்ள நிலையில் தமது நாட்டு விமான சேவைகளுக்கும் இவ்வனுமதி வழங்கப்பட வேண்டும் என இஸ்ரேல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment