
கண்டி, திகன பகுதியில் இளைஞர் ஒருவர் மரணித்ததன் பின்னணியில் அங்கு இனவாத சக்திகள் சிறு சிறு அசம்பாவிதங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் முஸ்லிம்கள் அமைதி காக்கும்படியும் பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்ளும்படியும் மார்க்க அறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உயிரிழந்த பெரும்பான்மையின இளைஞனின் குடும்பத்தினர் பண உதவியை பெற மறுத்துள்ள நிலையில் சில கடும்போக்குவாதிகளால் ஆங்காங்கு சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டிஐஜி லத்தீப் அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய மாகாணத்தில் பாரிய அனர்த்தத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு சிலர் செயற்படுவதாகவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு வகையான வதந்திகளும் பரப்பப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment