வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளி வீதியில் ஒரே இரவில் இரண்டு வீடுகளில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதே நல்லிரவு நேரத்தில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உட்புகுந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டினுள் இருந்த நகை மற்றும் பணம் போன்றவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment