
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகாது தவிர்த்து வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் யாருடைய தயவில் இருந்தாலும் அவரை எப்படியாவது கைது செய்து நீதி நிலை நாட்டப்படும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
கூட்டாட்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த அர்ஜுன் மகேந்திரனின் முகவரியோ, மின்னஞ்சலோ கூட தெரியாது என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ள நிலையில் அவரை யார் காப்பாற்றி வைத்திருந்தாலும் எப்படியாயினும் கைது செய்யப்படுவார் என அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் உள்நாட்டில் தலைமறைவாக இருந்த ஞானசாரவைப் பிடிக்க நான்கு விசேட பொலிஸ் அணிகள் களமறிஙகியும் முடியாமல் போயிருந்தமையும் பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment