ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கக் கோரி கண்டியிலிருந்து கொழும்பு வரை கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் பாத யாத்திரை இன்று மாவனல்லையில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4ம் திகதி நாடாளுமன்றில் விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் கொழும்பில் முடிவடையும் வகையில் குறித்த பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் ரணிலை பதவி நீக்கியே தீருவோம் என கூட்டு எதிர்க்கட்சி கங்கணம் கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment