![](https://i.imgur.com/kQFSbxe.jpg?1)
கொத்து ரொட்டியில் காணப்பட்ட சிறு 'மாவுத்' துண்டை அடிப்படையாக வைத்து வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் மீது அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதலின் தொடர்ச்சியில் கண்டியில் முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்றுக்கும் லொறி சாரதியொருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஹர்ஷ டிசில்வா.
வன்முறைகளை உடனடியாக நிறுத்தத் தவறிய அரசாங்கம் சுமார் ஒரு வார காலத்தின் பின் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் அவசர கால சட்டத்தின் கீழ் வன்முறையைத் தூண்டிய முக்கிய நபர்கள் 10 பேரை தடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தை முழுமையாக விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என ஹர்ஷ டிசில்வா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment