செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்று 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதில் 'கள்ள வாக்கு'ம் இணைந்துள்ளமை தொடர்பில் சபையில் பாரிய அதிருப்தி நிலவியுள்ளது.
இன்றைய அமர்வில் கலந்து கொள்ளாத எஸ்.பி. திசாநாயக்கவின் சார்பிலும் வாக்களிக்கப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே இவ்வாறு சர்ச்சை உருவாகியுள்ளது.
வழமையாக பொது மக்கள் கலந்து கொள்ளும் தேர்தல்களிலேயே இவ்வாறு கள்ள வாக்கு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment