
சட்ட ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் அதனை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அதற்கு பௌத்த பிக்குகள் மட்டத்திலும் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதற்கு மாற்றீடாக அப்பதவியை சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க அல்லது ராஜித சேனாரத்னவிடம் ஒப்படைக்கலாம் என முன் மொழிந்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.
2009ன் பின் இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவிரோத நடவடிக்கைகளைத் தூண்டி விட்டதில் சம்பிக்க ரணவக்கவுக்கே பாரிய பொறுப்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருவதோடு பொது பல சேனாவை கட்டிக் காப்பாற்றி வளர்த்தவர் அரசின் பக்கம் இருப்பதாக மஹிந்த தரப்பும் அடிக்கடி சம்பிக்கவின் பக்கம் விரல் நீட்டி வருகிறது.
இந்நிலையிலேயே சட்ட,ஒழுங்கு அமைச்சுப் பதவியை சம்பிக்கவுக்கு வழங்கலாம் என மனோ கணேசன் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment