அக்குறணை 9 மைல் கல்லுக்கருகாமையில் அமைந்துள்ள சிறிய பௌத்த சிலை இனந்தெரியாத நபர்களால் கடந்த சனிக்கிழமை 17-03-2018 உடைக்கப்பட்டிருந்த செய்தி அறிந்து அமைதியான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் அந்த இடத்தில் புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிலை உடைந்துள்ளதை ஒரு சில முஸ்லிம்கள் கண்டுள்ளனர். இது தொடர்பாக பிரதேச மக்கள் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், கிராம உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
உடனடியாக இவர்கள் விரைந்து செயற்பட்டதன் காரணமாக இந்தப் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட முடிந்துள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment