இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பரிஸ் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள் .இணைந்து எதிர்வரும் 17ம் திகதி பேரணியொன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை:
பாரிஸ் மாநகரில் வாழும் அணைத்து சமூக சகோதர( சகோதரி) நெஞ்சங்களே!! கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை உயர்த்துவோம் வாருங்கள்..
இதற்காக பாரிஸ் மாநகரில் வாழும் எல்லா முஸ்லிம் அமைப்புக்களும் இனைந்து ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் குறித்த பேரணிக்கு உங்கள் குடும்பத்தினரோடு வந்து கலந்து கொள்வதோடு, இலங்கையில் எரிக்கப்பட்டு துரத்தப்பட்ட நமது சமூகத்தின் குரலை உலகத்தின் முன் காட்ட தாழ்மையுடன் உங்களை அழைக்கிறோம்.
சமூகங்களின் நன்மை சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகின் நீதியான கண்களுக்கு தூக்கிக் காட்டுவோம் வாருங்கள்.
-Hyder Ali
-Hyder Ali
No comments:
Post a Comment