நான் முன் கூட்டியே எச்சரித்திருந்தேன்: மு.ரஹ்மான்! - sonakar.com

Post Top Ad

Thursday, 1 March 2018

நான் முன் கூட்டியே எச்சரித்திருந்தேன்: மு.ரஹ்மான்!




அம்பாறையில் இனவாதிகள் இயங்குவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒரு மாதத்துக்கு முன்பதாகவே தான் தெரிவித்திருந்த போதிலும் அதனை யாரும் கணக்கிலெடுக்கவில்லையென தெரிவிக்கிறார் கொழும்பு மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

அம்பாறை விடயத்தில் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இது குறித்து மேலும் தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீண்டும் பீதியில் வாழும் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.


நல்லாட்சியரசிலும் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஷ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment