அண்மைய இன வன்முறைகளின் பின்னணியில் தன்னால் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் சமூகம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டதாக விளக்கமளித்துள்ளார் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன்.
இன்றைய திம், ஐக்கிய இராச்சிய நேரம் மாலை 5.30 முதல் முஸ்லிம் குரல் வானொலியில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாளை ஜெனிவாவில் இடம்பெறப்போகும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக இன்று முஸ்லிம் குரலில் ஏற்பாடாகியுள்ள வானொலி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், மனோ கணேசன், ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர் ஹரீஸ், நா.உ முஜிபுர் ரஹ்மான் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை நேரம் இரவு 11 மணியளவில் இந்நிகழ்ச்சி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வானொலியை செவிமடுக்க: www.muslimkural.com
No comments:
Post a Comment