நாட்டில் இனவாத சூழ்நிலை முற்றாகத் தணியாத நிலையில் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் செல்லப் பிடிக்கவில்லையென்பதால் தான் செல்லவில்லையென விளக்கமளித்துள்ளார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
பாகிஸ்தான் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அச்ச சூழ்நிலையில் மக்கள் வாழும் நிலையில் அங்கு செல்வதை தான் விரும்பவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் ஆரம்பித்து கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தத் தவறிய அரசு சர்வதேச ரீதியில் அழுத்தங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Mohamed Suhail
No comments:
Post a Comment