வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 7 ல் கல்விகற்கும் மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலைக்கு மருந்தெடுக்க சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி ஓட்டமாவடியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மருந்தெடுப்பதற்காக வீதியோரத்தில் நின்றுகொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நபர் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இவ் விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை நாடத்தி வருவதோடு மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த நபரும் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment