கண்டி, திகன பகுதியில் இனவன்முறை ஆரம்பிப்பதற்குக் காரணியாக அமைந்த லொறி சாரதி மீதான தாக்குதல் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் அடுத்த மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதிலும் குறித்த நபர்களுக்கு சார்பாக சட்டத்தரணிகள் யாரும் ஆஜராகியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், சாட்சிகளும் இன்று நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் விசாரணை ஏப்ரல் 04ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment