முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் முகவரி கூட ஸ்ரீலங்கா அரசுக்குத் தெரியாத சூழ்நிலை அம்பலத்துக்கு வந்துள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் வாக்குமூலமளிப்பதற்காக சி.ஐ.டியில் ஆஜராகுமாறு மகேந்திரனுக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை தனியார் தபால் சேவை மூலம் அனுப்பி வைத்திருந்த போதிலும் அந்த முகவரியில் மகேந்திரன் இல்லையென பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகேந்திரன் எங்கிருக்கிறார் என்ற விபரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரன், ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தமையும் கூட்டாட்சியமைந்ததும் கையுமாக பாரிய அளவில் மத்திய வங்கி பிணை முறி விற்பனையில் மோசடி இடம்பெற்றிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment