கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் சட்டவிரோதமாக டிரமடோல் மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி, ஏத்தாலே பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் குறித்த நபரிடம் சுமார் 600 மாத்திரைகள் கைவசம் இருந்ததாகவும் இவர் நீண்ட நாட்களாக இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர், நுரைச்சோலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment