
அம்பாறையில் இவ்வாரம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் பின்னணியில் கடந்த அரசின் ஆட்சியாளர்களோடு நெருங்கிய தொடர்புள்ள ஒருவர் இருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
சம்பவத்திற்கு இரு தினங்களுக்கு முன்பே அப்பகுதிக்கு சென்றிருந்த குறித்த நபர் பொலிசாருடன் நெருக்கமான உறவைப் பேணி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பற்றி தெரிய வந்துள்ளதாக ராஜித மேலும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தை குழு மோதலாக சித்தரித்து பொலிசார் மூடி மறைக்கின்றமை தொடர்பிலும் பாரபட்சமற்ற விசாரணை நடாத்தப்படவுள்ளதாக ராஜித நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment