2015ல் இருந்த மக்கள் எதிர்பார்ப்பில் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவி விலக வேண்டும் என குரல் எழுப்பப் பட்டு வந்த நிலையில் இம்மாத இறுதிக்குள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பல கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின் முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் மார்ச் 31க்கு முன்னதாக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ரணிலுக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு கட்சிக்குள்ளேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment