இன்னும் ஆறு வருடங்களுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார் அந்நாட்டின் ஜனாதிபதி விலட்மிர் புட்டின்.
எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவாயினும் மேற்குலகம் இது தொடர்பில் மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் சீனா, கஸகஸ்தான் உட்பட ஏனைய நாடுகள் புட்டினுக்கு வாழ்த்துக்களை அனுப்பி வைத்துள்ளன.
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியின் பின் சிதறுண்டிருந்த நிலையில் நாட்டைக் கட்டியெழுப்பும் உறுதியான தலைவராக புட்டின் பார்க்கப்படுகின்ற அதேவேளை இரும்புக்கரம் கொண்டு ஜனநாயகத்தை அடக்கி வருவதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment