புலத்சிங்கள தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும.
மக்கள் போராட்டங்களில் நேரடியாகக் களமிறங்கிப் போராடும் தெவரப்பெரும, தனது தொகுதியில் கடந்த தேர்தலில் போதிய வாக்குகளைக் கட்சிக்குப் பெற முடியாமல் போனமை மற்றும் தொகுதிக்கு நல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனமை ஆகியவற்றைக் காரணங்காட்டி தனது இராஜினாமாவை ஒப்படைத்துள்ளார்.
அமைப்பாளர் பதவியை மாத்திரமன்றி பிரதமர் விரும்பினால் தனது பிரதியமைச்சர் பதவியையும் எடுத்துக் கொள்ளலாம் என பாலித மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைப்பாளர் பதவியை மாத்திரமன்றி பிரதமர் விரும்பினால் தனது பிரதியமைச்சர் பதவியையும் எடுத்துக் கொள்ளலாம் என பாலித மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment