திட்டமிட்டு தாக்குதல்களை நடாத்தி விட்டார்கள்: ஐ.நாவில் இலங்கை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 March 2018

திட்டமிட்டு தாக்குதல்களை நடாத்தி விட்டார்கள்: ஐ.நாவில் இலங்கை!


கண்டி மாவட்டத்தில் பல முஸ்லிம் கிராமங்கள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு விட்டன என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று பட்ட சமூகத்தில் வாழத் தகுதியில்லாதவர்களால் இவ்வாறு வன்முறை தூண்டப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்கள் ஊடாகவே இவை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு கண்டறித்துள்ளதாகவும் ஐ.நாவுக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆர்யசிங்க தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் கைகட்டிப் பார்த்திருக்க அரங்கேற்றப்பட்ட வன்முறைகளுக்கு பொறுப்பேற்க மறுத்து வரும் அரசு, மூன்றாந்தரப்பை குறை கூறுவதற்கே தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment