வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் அந்நூர் தேசிய பாடசாலைகளுக்கு குரங்குகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குரங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வருகை தந்து பாடசாலைகளின் பொருட்கள், கூரைகள் போன்றவற்றை சேதப்படுத்துவதோடு அப் பாடசாலைகளை அண்மித்துள்ள வீடுகளுக்கும் சென்று வீட்டுத் தோட்டங்கள் மரங்கள் போன்றவற்றை தொடர்ந்தும் சேதப்படுத்தி வருவதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment