பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி.
14 குற்றச்சாட்டுகள் அடங்கிய குறித்த பிரேரணை மீது கூட்டு எதிர்க்கட்சியின் 52 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நால்வரும் கையொப்பமிட்டுள்ளதாக மஹிந்த அணி தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, வாக்கெடுப்பின் போது பலர் ஆதரவளிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment