சுமார் 41 லட்ச ரூபா பெறுமதியான சவுதி நாணயத் தாள்களை விமான நிலையத்துக்குள் வைத்து கை மாற்றிக் கடத்தலில் ஈடுபட முனைந்த நபர் ஒருவர் நேற்றிரவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
500 ரியால் நாணயத்தாள்கள் 200ஐக் கைவசம் வைத்திருந்த நபர் விமான நிலையத்திற்குள் அதனை வேறு ஒருவரிடம் கைமாற்ற மறைத்து வைத்துக்கொண்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, குரண பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment