![](https://i.imgur.com/GG3Gl1b.png?1)
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் நடந்த கலவரத்தால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டதை யாவரும் அறிவர். இதில் பலகோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேசக் கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும்; அனைவரும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்வரும் ஜும்ஆக்களில் நிவாரண உதவிகளை (பணமாக) சேமித்து இவ்வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அது பற்றிய தகவலை 0117-490490 என்ற இலக்கத்தினூடாக எமக்கு அறியத்தருமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.
![](https://i.imgur.com/QxVlTMT.jpg)
No comments:
Post a Comment