ஏட்டிக்குப் போட்டியாக பள்ளிவாசல் உருவாக்குவதிலும் இலங்கை முஸ்லிம்களை வெளிநாட்டவர்களாகவே சித்தரிக்கும் கொள்கைகளை விதைப்பதற்கும் கொள்கை இயக்கங்கள் போட்டி போடும் முக்கிய இடமான மாதம்பையில் சோமபால குருப்பு ஆராச்சி என அறியப்படும் 77 வயது முதியவர் முஸ்லிம் பெயர் தாங்கிய குடிகாரனால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்க சிறு பதற்றம் நிலவியது.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் பின்னணியில் மது போதையில் தாக்கிய 28 வயது நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதோடு பிரதேசத்தில் மீண்டும் ஒரு இன வன்முறை ஏற்படாத வண்ணம் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரு கொள்கை இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு ஒருவரையொருவர் வெளிநாட்டு நிதியில் இயங்குவதாக பெண்களை வீதிக்கிறக்கி போராடிய சம்பவம் வரலாற்றில் மாதம்பையிலேயே பதிவாகியது.
இவ்வாறு தொழுகை மற்றும் சமூக ஒற்றுமைக்காக கொள்கையடிப்படையில் மோதிக்கொண்டிருக்க சமூகத்தின் அடி மட்டத்தில் குற்றச்செயல்கள் மற்றும் கலாச்சார சீரழிவு மலிந்து போயுள்ளதன் விளைவில் திகனயிலும் இது போன்ற சம்பவம் இடம்பெற்று அதன் விளைவில் கண்டியில் பல பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டதோடு உயிரிழப்பும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment