தொடர் நஷ்டத்தில் இயங்குவதாகத் தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் முயற்சி தோல்வியுற்றுள்ள நிலையில் தற்போது 49 வீத பங்கினை உள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
51 வீத பங்கினை அரசாங்கமே வைத்திருக்கும் எனவும் அரச - தனியார் கூட்டுறவு அடிப்படையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
எமிரேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயங்கிய போது இலாபமீட்டியிருந்த ஸ்ரீலங்கன் மஹிந்த ராஜபக்சவின் அடாவடியால் கூட்டுறவை முறித்துக் கொண்டது. கூட்டாட்சியில் பெரும்பாலும் உலகின் அனைத்து முன்னணி விமான சேவை நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட போதும் பயனில்லாத நிலையிலேயே தற்போது உள்ளூரில் தனியார் நிறுவனம் ஒன்றின் பங்களிப்பு தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment