2 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களுடன் சீன பிரஜை கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 26 March 2018

2 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களுடன் சீன பிரஜை கைது!



2 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை தனது பயணப் பொதிக்குள் மறைத்து வைத்து நாட்டுக்குள் எடுத்து வர முயன்ற சீன பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று காலை ஹொங்கொங்கிலிருந்து கொழும்பு வந்த விமானத்திலேயே குறித்த நபர் பயணித்துள்ளதாகவும் தனது பயணப் பொதிக்குள் இவ்வாறு இரத்தினக் கற்களை மறைத்து வைத்திருந்ததாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



இலங்கைக்கு சீன வர்த்தகர்களின் வரவு அதிகரித்து வருகின்ற அதேவேளை சட்டவிரோத சிகரட், மது மற்றும் இரத்தினக் கல் கடத்தலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment