2020 தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி வெல்ல வேண்டுமாக இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு புதிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களின் ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் அடங்கிய இக்குழு தம்புள்ளயில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் தலைமைப் பொறுப்பையேற்று புத்துணர்வளித்தாலன்றி ஐக்கிய தேசியக் கட்சியால் தேர்தலை வெல்ல முடியாது என தெரிவித்துள்ளது.
2015 பொதுத் தேர்தலில் வெற்றி கண்ட போதிலும் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை மாற்றப்பட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment