மார்ச் 19: ஜெனிவாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 March 2018

மார்ச் 19: ஜெனிவாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!



இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இனவன்முறைக்கு எதிராக அண்மையில் லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தற்போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை மாநாடு நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 19ம் திகதி அங்கு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த சுவிஸ் வாழ் முஸ்லிம்கள் சார்பில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா முன்றலில் எதிர்வரும் 19ம் திகதி பி.ப 1 மணியளவில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதோடு ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இலங்கை முஸ்லிம்களின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.



ஐக்கிய இராச்சியம், கனடா போன்ற நாடுகளில் ஏலவே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை எதிர்வரும் 17ம் திகதி பரிஸ் நகரிலும் கண்டனக் குரல்களைப் பதிவு செய்யும் வகையிலான பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை 19ம் திகதி ஐ.நா முன்றலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடியவர்களை நேரடியாக வந்து பங்கேற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

-EIMF Switzerland

No comments:

Post a Comment