காஸா எல்லையில் பலஸ்தீன மக்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது இஸ்ரேலிய துருப்பினர் மேற்கொண்ட தாக்குதல்களினால் சுமார் 1400 பேர் வரை காயமுற்றுள்ளதாகவும் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது பலஸ்தீன அதிகார சபை.
இதன் பின்னணியில் இன்று சனிக்கிழமை அங்கு முழு அளவிலான துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து அரச - அரச சார்பற்ற நிறுவனங்களும் செயலிழந்து துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை தமது உரிமைகளை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1976ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி நிராயுதபாணிகளான ஆறு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய துருப்பினரால் கொல்லப்பட்டதை நினைவு கூறும் முகமாக 'நிலத்தின் நாள்' என வர்ணிக்கப்பட்டு இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழப்புகள் தொடர்பில் ஐ.நா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment