காஸா பகுதியில் இன்று பாரிய எதிர்ப்பு பேரணி இடம்பெற்றதுடன் ஆங்காங்கு ஆக்கிரமிப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளதாகவும் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய எல்லைப் பகுதியை நோக்கி சுமார் 17,000 பலஸ்தீனர்கள் நடைபவனியாக வந்ததாகவும் அவர்களில் கலகக்காரர்களை நோக்கியே துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது.
ஆறு இடங்களில் இவ்வாறு இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடாத்தியிருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment