தமக்கு வழங்கப்பட்ட உணவில் கருத்தடை மாத்திரை இருந்ததாகக் கூறி பாரிய சர்ச்சையை உருவாக்கிய பேரினவாதிகள் அம்பாறையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அன்றைய தினம் நடந்தது என்ன என்பது குறித்து அங்கு பணியாற்றிய மாத்தறையைச் சேர்ந்த சிங்கள இளைஞர் தன்நிலை விளக்கமளித்துள்ளார்.
அவரது கூற்றின்படி, மது போதையில் வந்த ஒரு நபரே இச்சர்ச்சையை ஆரம்பித்துள்ளதுடன் மாவுத் துண்டு போன்ற சிறு பதார்த்தத்தை வைத்தே அதனை மாத்திரை எனக்கூறி இனவாத சர்ச்சையைக் கிளப்பியதோடு அனைவரையும் தாக்கியதாகவும் தெரிவிக்கிறார். இதேவேளை சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யப் போவதாக பொலிசார் தெரிவித்துள்ளமையும் கைது செய்து விட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment