பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஜே.வி.பியும் ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
கட்சித் தலைமைப் பதவியில் பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கட்சி மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டு வருவதுடன் நாடாளுமன்றிலும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே கூட்டு எதிர்க்கட்சியைத் தொடர்ந்து ஜே.வி.பியும் ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment