ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கு கூட்டு எதிர்க்கட்சி முழு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
ஏலவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெற்றியைச் சாதகமாக்கி ரணிலை பதவி நீக்குவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க கூட்டு எதிர்க்கட்சி முன் வந்துள்ளது.
எனினும், தமது கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறு குழுக்களாக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment