நேற்றிரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் ஏற்பட்ட சர்ச்சையொன்றின் பின்னணியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பள்ளிவாசல் தாக்கப்பட்டதன் பின்னணியில் அம்பாறை நகரில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய வன்முறை சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் நான்கு கடைகள் மற்றும் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், சம்பவம் இடம்பெற்ற வேளையில் கூப்பிடு தொலைவிலேயே நின்ற பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment