மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் வதந்தியொன்றின் அடிப்படையில் சிறு சலப்பும் அச்சுறுத்தலும் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து கிழக்கில் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியையடுத்தே அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கு சில சிங்கள இளைஞர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனினும், குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சர்ச்சைகளைத் தவிர்க்குமுகமாக வழமைக்கு மாற்றமாக சற்று முன் கூட்டியே முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பாரிய பிரச்சினைகள் எதுவும் இல்லையெனவும் விடுமுறை காலங்களில் வழமையாக கடைகள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment