ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி தொடர்பாக மக்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய கௌப்பிகளை இன்று கைப்பற்றியுள்ளதாக ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.தாரீக் தெரிவித்தார்.
பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பிகளை அவிப்பதற்கான தண்ணீரில் ஊற வைக்கும் போது நிறம் மாறியதாகவும், நறுமணம் வீசுவதாகவும் மக்கள் ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் மக்களின் முறைப்பாட்டுக்கமைய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பலீல் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.கே.ஜௌபர், ஏ.எம்.எம்.அனீஸ் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒரு கிலோ நிறை கொண்ட கௌப்பி பைகள் மூப்பதி இரண்டும், இருபத்தைந்து கிலோ நிறை கொண்ட கௌப்பி பைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவற்றினை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பிரசோதனைக்கு அனுப்பி விசாரணை நடாத்தப்படும் என்று ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.தாரீக் மேலும் தெரிவித்தார்.a
No comments:
Post a Comment