பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தில் பல்வேறு குழறுபடிகள் நிலவும் நிலையில் எழுவர் கொண்ட குழுவுடன் இன்று காலை பெங்களூர் பயணமாகியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
இந்தியாவுடன் நெருங்கிய உறவுகள் அவசியப்படுவதாக அண்மைக்காலமாக மஹிந்த அணி தெரிவித்து வரும் நிலையில் அவரது இப்பயணம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க சட்ட,ஒழுங்கு அமைச்சராகப் பதவியேற்ற நிலையில் அம்பாறையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசலின் பகுதி எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment