சஷி வீரவன்சவுக்கு நம்பிக்கையில் வழங்கப்பட்ட சட்டவிரோத கடவுச்சீட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 February 2018

சஷி வீரவன்சவுக்கு நம்பிக்கையில் வழங்கப்பட்ட சட்டவிரோத கடவுச்சீட்டு!




சட்டவிரோதமாக இரு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்த விமல் வீரவன்சவின் மனைவின் சஷி வீரவன்ச, தமது ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்டதாகவும் அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவதாகவும் முன் வைத்த கோரிக்கையை ஏற்று நம்பிக்கையின் அடிப்படையிலேயே தாம் கடவுச்சீட்டை வழங்கியதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார் முன்னாள் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர்.


இன்றைய வழக்கு விசாரணையின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், சஷி வீரவன்சவின் அவசர தேவை நிமித்தம் கடவுச்சீட்டை வழங்க தாம் எழுத்து மூலம் உத்தரவு வழங்கியதாகவும் விரைவில் அவர் ஆவணங்களை ஒப்படைப்பார் என குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், சஷி வீரவன்ச, இரு வேறு விதமான தகவல்கள் அடங்கிய இரு கடவுச்சீட்டுக்களை சட்டவிரோதமாக வைத்திருந்தமையும் வழக்கு விசாரணை ஏப்ரல் 23 தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment